கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஒரு ரோபோவிற்கு சமையல் காணொளிகளை பார்த்து உணவுகளை தயாரிப்பதற்கு பயிற்சி கொடுத்தனர். எட்டுவகை கலவைகளை(ஸாலெட்) அதனுள் நிரவல் செய்தனர். பின் ஒரு மனிதன் அதில் ஒருவகையை தயார் செய்வதை நிகழ்த்திக் காட்டினர். ரோபோ அதை சரியாக அடையாளங்கண்டு தயாரித்தது. மேலும் எட்டு வகைகளையும் செய்து காட்டியதோடு தானே சொந்தமாக தனித்துவமான உணவையும் உண்டாக்கியது.